சிங்கத்தை ‘துரத்தும்’ ஆமையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஆமை ஒன்று குட்டையில் தண்ணீர் குடிக்க வரும் சிங்கத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் காட்சிக வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மலாமாலா வனப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பார்ப்பதற்கு நம்பமுடியாததாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இணையத்தில் வெளியான இந்த வீடியோவை இதுவரை 3.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. மேலும் வீடியோவு குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
சிலர் குங் ஃபூ பாண்டா என்ற அனிமேஷன் திரைப்படத் தொடரில் வரும் “மாஸ்டர் ஊக்வே!” என்ற கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு கேலி செய்து வருகின்றனர்.