பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது மதுராந்தகம் பொதுக்கூட்டம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ வின் பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று தமிழ் நட்டில் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் தமிழ் நாடு வந்தார்.

இந்த நிலையில் தற்போது மதுராந்தகத்தில் என்.டி.ஏ வின் பொதுக்கூட்டமானது தற்போது தொடங்கியுள்ளது. இக்கூடத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.