பெண்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்காததால் தான், அவர்களின் போராட்டங்கள் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு
விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இக்கல்லூரியில் பயின்ற 900 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கனிமொழி பட்டங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “பெண்களுக்கு கல்வி கூடாது என உலகத்தில் ஒரு காலத்தில் இருந்தது. பெண் கல்வி மட்டுமல்லாமல் ஒவ்வொன்றையும் போராடி பெற்று இருக்கிறோம். பெண்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்காததால் பெண்களின் போராட்டங்கள் ஒயவில்லை. பெண்களுக்கு முழுமையாக உரிமைகளை வழங்குவதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது.பெண்களுக்கான வரையறையை உடைத்து எரிந்தவர் தந்தை பெரியார். மதம், காலச்சாரத்தை சொல்லி பெண்களை கட்டுக்குள் வைக்க நினைக்கிறார்கள். பெண்களின் கனவு, எதிர்காலம் அவர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி, “கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். குடும்பத் தலைவர் இடத்தினை குடும்பத் தலைவிகள் பிடித்து உள்ளனர். அனைத்து துறைகளில் 70 சதவீதத்துக்கு மேல் பெண்கள் பணியாற்றி
வருகிறார்கள்” என கூறினார்.