பேராசிரியர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆன்லைன் வகுப்பு எடுக்கவோ, NAAC சார்ந்த பணிகள் அல்லது இதர பணிகளுக்காக பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு வருமாறு பேராசிரியர்களுக்கு அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







