முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு

பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் என பலருக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், ’கொரோனா பாதிப்பை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் உள்பட யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Jeba

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்

Ezhilarasan

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம்!

Karthick