7 பேர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் பாண்டியராஜன்

7 பேர் விடுதலை குறித்து தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆவடியில்…

7 பேர் விடுதலை குறித்து தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை என்று கூறினார். இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி ஏழுபேர் விடுதலை குறித்து அறிவிப்பார் என்றும் அவர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவுபடுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply