முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈசா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். இந்த பயணத்தின் போது மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அதன் பின்னர் கோயம்புத்தூர் சென்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதாக இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனடிப்படியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் கோயம்புத்தூர் திரும்பினார்.  கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையும் படியுங்கள்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்!

அதனைத்தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்றடைந்த திரௌதி முர்முவை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். இதனையடுத்து ஈஷாவில் உள்ள சந்திரகுண்டம், சூர்யகுண்டம்,லிங்க பைரவி, தியான லிங்கம் ஆகியவற்றை தரிசித்தவர் தியானலிங்கத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்து பஞ்சகிரியை பூஜையில் பங்கேற்றார்.

இதனையும் படியுங்கள்: ‘மோசடி பத்திரப்பதிவை தடுக்க மாவட்ட அதிகாரிக்கு அதிகாரம்’ – தமிழக அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

குடியரசுத்தலைவரின் வருகையால் கோவை மாவட்டம் முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதோடு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு தொடர்ந்து இன்று இரவு கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை நீலகிரி செல்லும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெலிங்கடனில் உள்ள முப்படை கல்லூரிகளின் விழாவில் பங்கேற்கிறார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ருதுராஜ் விளாசல்.. சிஎஸ்கே அதிரடி வெற்றி

EZHILARASAN D

முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!

Halley Karthik

இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி

Halley Karthik