முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். இந்த பயணத்தின் போது மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அதன் பின்னர் கோயம்புத்தூர் சென்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதாக இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் வரவேற்ற்றனர். பின்னர் அங்கிருந்து  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று  சாமி தரிசனம் செய்தார்.  அப்போது காரில் இறங்கி  அங்கே நின்று கொண்டிருந்த பொது மக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார்.

இதனையும் படியுங்கள் : அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் கார் மூலமாக பாதுகாப்புடன் புறப்பட்டு தெற்கு ஆவணி மூல வீதிப்பகுதி வழியாக சென்றார். அப்போது கோயிலுக்கு வெளியே வெயிலில் காத்திருந்த பொது மக்களை பார்த்தபின் திடீரென காரில் இருந்து கீழே இறங்கி பொதுமக்களை நோக்கி அவர் நடந்து சென்றார்.  குடியரசு தலைவர் காரில் இருந்து கீழே இறங்கி பொதுமக்களை சந்தித்ததை கண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் மதுரை வருகையை  ஒட்டி, மதுரை மாநகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்களுக்கு செல்வதற்கு  சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ததை, தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து மதுரை விமானம் நிலையத்திலிருந்து கோவை சென்றடையும் திரெளபதி முர்மு, அங்கிருந்து கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பின்னர் நாளை (பிப்.19) கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்!

எல்.ரேணுகாதேவி

டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

Web Editor

“இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர்”- ஹெச்.ராஜா

G SaravanaKumar