நள்ளிரவில் உதவிய காவலர்: நன்றி தெரிவித்து இலங்கை மருத்துவர் கடிதம்!

திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் உதவிய மனிதநேய காவலருக்கு இலங்கை மருத்துவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த மருத்துவர் ராமசுப்பு. இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன்…

திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் உதவிய மனிதநேய காவலருக்கு இலங்கை மருத்துவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த மருத்துவர் ராமசுப்பு. இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளார். அப்போது, அவரது 1 வயது பேரக்குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நள்ளிரவில் குழந்தைக்கு மருந்து வாங்க கோவில் காவல் நிலைய காவலர் சிவா தங்கதுரை உதவியுள்ளார்.

நள்ளிரவில் உதவிய காவலர் சிவாதங்கதுரையையும், காவல் துறையையும் பாராட்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு நன்றி மறவாமல் கடிதம் எழுதியுள்ளார் மருத்துவர் ராமசுப்பு. மருத்துவர் ராமசுப்புவின் கடிதம் கிடைத்ததும் நெகிழ்ந்து போய் எஸ்.பி. சரவணபாலாஜி காவலரின் மனிதநேயத்திற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.