கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர்.
இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே இருக்கக்கூடிய தியாகராஜபுரம் கிராம பகுதியில் வீட்டில் வைத்து சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருதாக தகவல் தெரியவந்தத.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாராய பாக்கெட்டுகளையும் மற்றும் சாராய விற்பனை செய்து வந்தவரையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை சாலையிலேயே கொட்டி அழித்தனர்
சாராயம் விற்பனை செய்யும் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதுபோல கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக இருந்த 800 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கொட்டி அழித்தனர்.







