திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான் என்றும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும் தெரிவித்தார்.
முத்தமிழ் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சிகளில் தமிழுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், தமிழில் படிப்பது இன்றைய காலத்திற்கு மிக மிக அவசியம் என தெரிவித்த அவர், மருத்துவ நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மொழியை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என குறிப்பிட்ட அவர், இளைய தலைமுறையினருக்கு தமிழ் இலக்கிய உணர்வை ஊட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.







