இயக்கத்திற்காக உழைப்பவர்களுக்கே கட்சி; மற்றவர்கள் வெளியே செல்லலாம் – துரை வைகோ

இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது வெளியே செல்லலாம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் காலை முதல் காட்சியாக வைகோ…

இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது வெளியே செல்லலாம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் காலை முதல் காட்சியாக வைகோ குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துறை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டுகளித்தனர்.

பின்னர், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசிய துறை வைகோ, இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் தலைவருக்கே தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம். அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தொண்டர்கள், நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர். இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்யத் தயங்குகின்றனர்.

இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம் என்று காட்டமாகப் பேசினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.