எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி அடைந்ததை எதிர்க்கட்சி யினர் கொண்டாடி வருகிறார்கள். இதனை கண்டித்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில், ” நாட்டின் பாதி மக்கள்தொகையான 70 கோடி பெண்களை ஏமாற்றி, அவர்களின் நம்பிக்கையை இழந்த பிறகு, ஒருவரால் எப்படி வெற்றியைக் கொண்டாட முடியும்?. எதிர்க்கட்சிகளின் இந்த கொண்டாட்டம். பல தசாப்தங்களாக தனது உரிமைகளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண் ணுக்கும் ஒரு அவமானம்.

காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எத்தனை முறை பெண்களை காட்டிக் கொடுக்கும்? பல சமயங்களில், ஆணவத்தால் பிறக்கும் வெளித்தோற்ற வெற்றியின் மகிழ்ச்சி, உண்மையில், ஒரு மறைக்கப்பட்ட பெரும் தோல்வியாகும். இதை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.