கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடத்தை அணியப்போகும் அடுத்த ராணி!

இங்கிலாந்து ராணி எலிசபெத் 2-ம் மறைவைத் தொடர்ந்து  அவர் வசம் இருந்த  கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் புதிய ராணியான  கமிலாவிடம் செல்கிறது.  உடல்நலக்குறைவால் 2-ம் எலிசபெத் நேற்று தனது 96 வயதில் உயிரிழந்தார்.…

இங்கிலாந்து ராணி எலிசபெத் 2-ம் மறைவைத் தொடர்ந்து  அவர் வசம் இருந்த  கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் புதிய ராணியான  கமிலாவிடம் செல்கிறது. 

உடல்நலக்குறைவால் 2-ம் எலிசபெத் நேற்று தனது 96 வயதில் உயிரிழந்தார். ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக பக்கிங்காம் அரண்மனையால் அறிவிக்கப்பட்டுள்ளார். சார்லஸ் புதிய ராஜாவானதால் அவரது மனைவி கமிலா ராணியாகியுள்ளார். இதனால் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம் ராணி கமிலாவிடம் செல்கிறது.

உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமாக கோஹினூர் வைரம் இன்று வரை அரச குடும்பத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் கோஹினூரில் கிபி 13ம் நூற்றாண்டில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோகினூர் வைரம் பல்வேறு இந்திய மற்றும் பாரசீக ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. இந்த விலை உயர்ந்த வைரமானது பஞ்சாப்பை ஆண்ட துலீப் சிங் என்ற மன்னரிடம் கடைசியாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1851-ம் ஆண்டு ராணி விக்டோரியாவிற்காக இந்தியாவிலிருந்து, இங்கிலாந்திற்கு கோஹினூர் வைரம் கொண்டு செல்லப்பட்டது. விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்டபோது இது இங்கிலாந்தின் கிரீட நகைகளின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த வைரம் 1937 முதல் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கிறது. அன்று முதல் இங்கிலாந்து ராணி, அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த கிரீடம் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கலாள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா மகாராணிக்கு பிறகு கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம் இங்கிலாந்தின் ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் வசம் ‘டவர் ஆஃப் லண்டன்’ கோட்டை அரண்மனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர் உயிரிழந்த நிலையில் தற்போது ராணியாகியுள்ள கமிலா வசம்  கோஹினூர்  வைரம் செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.