பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: சிறப்பு எஸ்ஐ கைது

குன்னூரில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் சரவணன்…

குன்னூரில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் சரவணன் (39). இவர், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, உயர் அதிகாரிகளிடமும் அந்தப் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, சரவணன் மஞ்சூருக்கு  பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், சரவணன் மீதான நடவடிக்கை போதாது, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பெண் காவலர் வலியுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மேல்குன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.