முக்கியச் செய்திகள்சினிமா

நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் | பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகளால் சர்ச்சை!

நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகள் இடம் பெற்றுள்ளதால்  சர்ச்சை எழுந்துள்ளது. 

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் முடியில்லா தலையைப் பற்றி கேலியாகக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேறி கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. பின்னர், நோயின் காரணமாக மனைவிக்கு முடி கொட்டும் பிரச்னையால் அவருடைய மனது பாதிக்கப்பட்டது. அதனால் கோபத்தில் அடித்தேன் என வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். முதன்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித்தை ஆஸ்கர் கமிட்டி 10 ஆண்டுகள் ஆஸ்கர் குழுவிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்!

4 முறை கிராமி விருதினை வென்ற 55 வயதான நடிகர், ரேப் பாடகர் வில் ஸ்மித் 2017 முதல் தனது தனிப் பாடல்களினை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வில் ஸ்மித், “யுவ் கேன் மேக் இட்” என்ற ஆல்பத்தினை வெளியிட்டுள்ளார். இதில் வரும் சில வரிகள் கிறிஸ் ராக் சம்பவத்தினை நினைவுப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“வில் ஸ்மித்தினை ரத்தம் சிந்த வைக்க அவர்கள் முயற்சித்தார்கள், அதன் பின்புற கண்ணாடியில் துரதிருஷ்டம் பரிசாக இருப்பதைப் பார்த்தேன்” என சில வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.

Will Smith - You Can Make It ft. Fridayy and Sunday Service (Lyric Video)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டவர்க்கு 80% வேலை-சட்டம் நிறைவேற்ற வேண்டும்; ராமதாஸ்

Halley Karthik

இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்

Web Editor

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading