முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் பதவியில் அவமதிக்கப்பட்டேனா?-முரசொலி செய்திக்கு தமிழிசை விளக்கம்

ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று முரசொலியில் செய்தி வெளியானது குறித்த கேள்விக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கும்பகோணத்தில் உலோகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் வருகை தந்துள்ளேன். இரண்டு மாநில ஆளுநராக எனது பணியை சிறந்த முறையில் உண்மையாக செய்து வருகிறேன்.

வருங்காலத்தில் தமிழகத்தில் இறைவன் எனக்கு எந்த மாதிரியான பணிகளை வழங்க இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் இருந்து அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரக் கூடிய அழைப்புகளுக்கு ஒரு சகோதரத்துவத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று முரசொலியில் செய்தி வெளியிட்டது குறித்த கேள்விக்கு, “நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை. புலியை முறத்தினால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்.

இன்னொரு மாநிலத்தில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என்று இங்கு உள்ளவர்கள் மனநிலை இருந்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது.

ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது” என்று பதிலளித்தார் தமிழிசை செளந்தரராஜன்.

அவர் மேலும் கூறியதாவது:

தெலங்கானாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.

தேசிய கல்வி கொள்கை என்பது ஏதோ சும்மா உருவாக்கப்படவில்லை – பல லட்சம் ஆசிரியர்கள் பல லட்சம் மக்கள் அதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்றதால் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது – இதை அரசியல் ஆக்க கூடாது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் சந்திப்பதற்கு அவர்களை தயார் படுத்துவதே நோக்கம் – புதிய கல்வி கொள்கையில் எவ்வளவோ நல்லது உள்ளது. 8 வயது வரை குழந்தைகளுடைய மூளை கிரகிக்கக்கூடிய தன்மை உடையது. 3-ம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் படிக்க முடியுமா என்பதெல்லாம் ஆய்வு செய்த பின்னர்தான் இதனை முடிவு செய்துள்ளனர்.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்துக்களைக் கேட்டு தான் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு என்று முடிவு செய்துள்ளனர் என்றார் தமிழிசை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லைப்பெரியாறு வழக்கு: இடுக்கி காங்கிரஸ் எம்பி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

Arivazhagan Chinnasamy

குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

Jayapriya

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கம் வென்று இந்தியா அசத்தல்

G SaravanaKumar