முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.1,000-ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965ல் இருந்து ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதைப் போன்று, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை சென்னையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.915 ஆக இருந்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இதன் விலை ரூ.965 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இதன் விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது.

அத்தியாவசியமான பொருளாக உள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொருளாதாரத்தில் பின்தங்கிய எளிய மக்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

Saravana Kumar

தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

Saravana Kumar

சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!

Gayathri Venkatesan