இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்த வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இருதரப்பிற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். டிரம்ப்பின் இந்த அமைதி வாரியத்தில் இணைய இதுவரை , ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, வியட்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, அர்ஜென்டினா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் அமைதி வாரியத்தில் துருக்கி இடம்பெற்றிருப்பது குறித்து இஸ்ரேல் அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு உறுதிபடுத்தியுள்ளது.







