முக்கியச் செய்திகள் குற்றம்

குழந்தை மர்ம மரணம்; பெற்றோர் கைது

மதுரை உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துப்பாண்டி – கௌசல்யா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஐந்தே நாளான நிலையில் குழந்தை உயிரிழந்ததாக கூறி கடந்த 26ம் தேதி வீட்டில் முன்பு புதைக்கப்பட்டது. சிசுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து அவர்கள் விசாரணையை தொடங்கிய நிலையில், குழந்தையின் பெற்றோர் தலைமறைவாகினர். இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. குழந்தையின் மரணம் சிசுக்கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த முத்துப்பாண்டி – கௌசல்யா தம்பதியை கைது செய்த காவல்துறையினர், பெண் சிசுவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்

EZHILARASAN D

உக்ரைன் – ரஷ்யா: இன்று, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

Jayasheeba