கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில், வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில சிக்கி, 12 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில், புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலில்…

ஜம்மு-காஷ்மீரில், வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில சிக்கி, 12 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில், புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 2.45 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்த பக்தர்கள் சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.