ஆரோவில்லில் விமரிசையாக நடைபெற்ற தண்ணீர் திருவிழா!

திண்டிவனம் அருகே ஆரோவில்லில் தண்ணீர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.  விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். கிராம குளங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து இயற்கை வாழ்வியல் முறைகளை கையாண்டு வாழ வேண்டும்…

திண்டிவனம் அருகே ஆரோவில்லில் தண்ணீர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.  விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.

கிராம குளங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து இயற்கை வாழ்வியல் முறைகளை கையாண்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் , ஆரோவில்லில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.

இந்த 50ம் ஆண்டு விழாவிற்கு 325 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர், ஆரோவில்
அருகில் உள்ள குளங்களில் கலக்கப்பட்டது. மேலும், ஆரோவில்லை சேர்ந்த‌ ஜானி மற்றும்
ரேணு தலைமை தாங்கினர்.

பின்னர் குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், ஆலங்குப்பம், எடையஞ்சாவடி,
அன்னை நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரவிந்தர் ஆசிரமவாசி கொண்டு வந்த
நீரையும் கலந்து, ஆரோவில் பகுதியை சுற்றியுள்ள குளங்களில் ஊற்றப்பட்டது.

ஆரோவில், “சர்வதேச நகரவாசிகள் அனைத்திற்கும் மற்றும் தண்ணீர் அனைவருக்கும் ” என்ற அமைப்பினர்கள் இணைத்து, தண்ணீர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்துள்ளனர்.

–கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.