முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

10 பொருட்களுக்கு புவி சார் குறியீடு பெற திட்டம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ரூ.30 லட்சம் மதிப்பில் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியனார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கே உரிய வேளாண் பொருள்கள் என்ற வகையில் பல பொருட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் விளையும் பொருள் மற்றொரு மாவட்டத்தில் விளைவதில்லை. அந்த சிறப்புள்ள வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலக அளவில் சந்தையில் இடம் பெற செய்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும்.கடந்த ஆண்டில் சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு பூவிசார குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் ஆண்டிலும் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு ரூ.30 லட்ச மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

Arivazhagan Chinnasamy

கேன்ஸ் விழாவில் அரை நிர்வாணப் போராட்டம்

EZHILARASAN D

75வது சுதந்திர தினம்-சென்னை மக்களுக்கு மேயர் வேண்டுகோள்

Web Editor