ஓடிடியில் வெளியானது யாத்திசை திரைப்படம்!

வரலாற்று புனைவு படமான யாத்திசை திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான…

வரலாற்று புனைவு படமான யாத்திசை திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘யாத்திசை’. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாண்டிய மன்னர்கள் மற்றும் எயினர்கள் குல வரலாற்றை புனைவு கலந்து சொல்லும் இப்படத்தை தமிழ்நாட்டில் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.

இப்படம் சுமார் 7-10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று படம் எடுக்க குறைந்தது ரூ.50 கோடி செலவாகி வரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் தரமான வரலாற்று படத்தை எடுக்கலாம் என்பதை யாத்திசை மூலம் செய்து காட்டினார் இயக்குநர் தரணி ராஜேந்திரன்.

இப்படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் படத்தால் யாத்திசை படத்திற்கு சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்து அதன் ரிலீசுக்கு பின்னரும் கணிசமான திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது இந்த படம்.

இந்த யாத்திசை திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. யாத்திசை திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இனி வரலாற்று புனைவு கதையை வீட்டில் இருந்த படியே பார்த்து ரசிக்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.