“திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன்”- இளையராஜா

வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதைகள் கொண்டவை. திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் ஆடியோ மற்றும்…

வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதைகள் கொண்டவை. திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் ஆடியோ மற்றும்
டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சேத்துபட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில்
நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி, இசையமைப்பாளர் இளையராஜா, தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தில் பணியாற்றிய தொழிலாளி உயிரிழந்ததற்கு 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா விடுதலை படத்தின் இசையை வெளியிட்டார்.

இதையும் படிக்கவும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இக்கதையின் தொடக்கமே இளையராஜா தான். 45 நிமிடங்கள் படத்தை எடுத்து வந்து காட்டினேன். அதன் பின்னர் உருவானது தான் காட்டுமல்லி பாடல். இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் இளையராஜா உடன் வேலை செய்தது. கனிவோடு என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய பரிசாக உள்ளது.

தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதைகள் கொண்டவை. இந்த படம் திரை உலகம் சந்திக்காத படம். கடலில் வரும் அலை எப்படி மாறி மாறி வருகிறது. அதுபோலவே தான் இந்த கதையும். திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன். 1500 படம் பண்ணதற்கு பிறகு இதை நான் சொல்கிறேன் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என்று கூறினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசுகையில், வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தலைப்பை எங்களுக்கு வழங்கிய சுரேஷ் பாலாஜிக்கு நன்றி. ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்தது பெருமை. இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் இளையராஜா தற்போதைய தலைமுறை வரைக்கும் போட்டியாக உள்ளார். இளையராஜாவின் ரசிகர்களுக்கு இது தனி கெத்து. அவரது கடின உழைப்புதான் அவரது வெற்றிக்கு காரணம். விஜய் சேதுபதி எல்லா மொழிகளிலும் ஹிட் கொடுத்து வருகிறார்.

கதாநாயகன் சூரி பேசுகையில், என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் தான் இந்த படத்தில் நடித்தது. நீ காமெடியன் என்று முடிவு பண்ணாதடா. நீயே ஒரு வட்டத்தை போட்டு கொள்ளாத என்று வெண்ணிலா கபடி குழு படத்தின் போதே விஜய் சேதுபதி கூறினார்.
கதாநாயகன் என்பது எதிர்பார்க்காத பெரிய வாய்ப்பு. நான் கடைசி வரை நடிகனாக
இருக்கணும், கடந்த காலங்களில் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும்
என்று கஷ்டப்பட்டவன் நான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.