முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

41-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை, 41வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கட்டிட பணிகள் 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர், சுரங்க மின்நிலையம் உள்ளிட்ட 3 இடங்கள் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில் உதவிடும் வகையில், 16 கண் பாலம் என்ற உபரி நீர்ப் போக்கியும் உள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், டெல்டா மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவந்த தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணை கட்டி முடிக்கப்பட்டு, 88 ஆண்டுகள் ஆன நிலையில், 41வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Jeba Arul Robinson

எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை

Halley Karthik

மாவீரன் படத்திற்காக பத்திரிக்கையாளராக மாறிய அதிதி சங்கர்

EZHILARASAN D