உயர்தர ஸ்டீல் அலாய் கண்டுபிடிப்பு: ஐஐடி மெட்ராஸ் அசத்தல்

வாகனங்களின் எடையை குறைக்க ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உயர்தர ஸ்டீல் அலாயை, ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடித்துள்ளது. வாகனங்களின் எரிபொருள் நுகர்வு, அதன் எடையை பொறுத்து அமைகிறது என்பதால், விஞ்ஞானிகள் இலகு ரக உலோகத்தை…

வாகனங்களின் எடையை குறைக்க ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உயர்தர ஸ்டீல் அலாயை, ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடித்துள்ளது.

வாகனங்களின் எரிபொருள் நுகர்வு, அதன் எடையை பொறுத்து அமைகிறது என்பதால், விஞ்ஞானிகள் இலகு ரக உலோகத்தை கண்டுபிடிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். பொதுவாக கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டீலில் தயாரித்து வருகின்றனர். விபத்துச் ம்பவங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக, ஸ்டீலில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எரிபொருளும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலைகள் இப்போது அதிகரித்து வரும் நிலையில், எடைகுறைவான இலகு ரக உலோகம் கண்டுபிடிக்கப்பட்டால், மக்களுக்கு அது பணத்தை மிச்சப்படுத்த உதவும். இதையடுத்து கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில், மெட்ராஸ் ஐஐடி-யின் உலோகவியல் துறை பேராசிரியர் சுப்பிரமணிய சர்மா வட்லமணி மற்றும் அவர் குழுவினர் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உயர்தர ஸ்டீல் அலாயை கண்டுபிடித்துள்ளனர்.

மாங்கனீஸ், கார்பன், அலுமினியம், சிலிகான், நிக்கல், நியோபியம் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எஃகுடன் கலந்து இந்த ஸ்டீல் அலாயை கண்டுபிடித்துள்ள னர்.தங்கள் ஆராய்ச்சி முடிவுகளின் படி, இதை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக எஃகு மற்றும் வாகனத் தொழில்துறையினருடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.