திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்

திங்கட்கிழமையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு…

திங்கட்கிழமையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

 

இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

 

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நிர்வாக நீதிபதி பிஎன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே 3 கொரோனா அலைகளில் இருந்து தப்பித்து உள்ளோம் என தெரிவித்த அவர்,பாதுகாப்பு கருதி வரும் திங்கட்கிழமை (20.06.2022) முதல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் எனக் கூறினார்.

 

மேலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெறும் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உயர்நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

 

– இரா. நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.