வெளியானது விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்

விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை  வெற்றிமாறன்…

விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை  வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதையை 2 பாகங்களாக வெளியிடவுள்ள நிலையில் மார்ச் 31ம் தேதி படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்  வழங்குகிறது. சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை படத்தில் இடம்பெற்ற ரயில் காட்சிகளுக்கு செட் போடுவது தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் அமைக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாகத் தோற்றமளிக்கும்வாறு அமைக்கப்பட்டது.  பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுதலை திரைபடத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரயில் செட், பாலம், ரயில் விபத்து போன்றவை  தத்ரூபமாக காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த மேக்கிங் விடீயோ வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.