முக்கியச் செய்திகள் கட்டுரைகள் விளையாட்டு

பிறந்தநாள் காணும் ஹாக்கி தமிழன்


வரலாறு சுரேஷ்

“நீ எத்தனை தோல்விகளை வேண்டுமானலும் கொடு…. ஆனாலும் நான் வெற்றிபெறுவதற்காக தொடர்ந்து போராடுவேன். என் முயற்சிகளை ஒரு போதும் கைவிட மாட்டேன்” இந்த வார்த்தையை கேட்கும் போதே உடல் சிலிர்க்கிறது தானே… ஆனால், இப்படி ஒரு மனிதர்.. இந்த நாட்டுக்காக, தன்னால் எவ்வளவு முடிகிறதோ., அவ்வளவு போராடினார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்…. கருப்பு தோலுக்கும் கவர்ச்சியூட்டிய அந்த நெருப்பு தமிழனின் பெயர் தன்ராஜ் பிள்ளை…. இந்தியாவின் தேசிய விளையாட்டை உலகரங்கில் உயர்த்தி பிடித்த ஹாக்கி வீரன்….

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை தவிர பிற விளையாட்டுகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்ற மனநிலை தான் பலருக்கும் இருக்கிறது. அண்மைக் காலங்களில் துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், மல்யுத்தம், வாள்வீச்சு என பிற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் கவனம் ஈர்த்து வருவதால், இந்த நிலை மாற தொடங்கியிருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையேவேறு. கிரிக்கெட்டை விட்டால் வேறு வழியே இல்லை என்பது தான் பலரின் எண்ணம். அதைத்தான் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார் தன்ராஜ் பிள்ளை. எப்படி தமிழனுக்கு கபடி தேசிய விளையாட்டோ.. அப்படி ஒவ்வொரு இந்தியர்களுக்கும் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதை… 1998 ஏசியன் கேம்ஸ், 2003 ஏசியா கப் போன்றவற்றை வென்று, வெற்றிக்கொடி நாட்டினார் தன்ராஜ் பிள்ளை…. 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஒரே இந்திய வீரர் தன்ராஜ் பிள்ளை தான். 4முறை உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்றவர், 4 முறை சாம்பியன் ட்ராஃபியில் பங்கேற்றவர், 4 முறை ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர் என இவரது சாதனை கணக்கிலடங்காதது.

1994ம் ஆண்டு சிட்னி உலகக் கோப்பை போட்டிகளின் போது, உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் 11வது இடம்பிடித்தார் தன்ராஜ் பிள்ளை. அந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரரும் அவர் மட்டும் தான். ஹாக்கி மட்டையால் விளையாட்டுலகத்தின் விதியை மாற்றி எழுதிய தன்ராஜ் பிள்ளை, பாரத் கௌரவ் விருது, அர்ஜூனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது என பல்வேறு விருதுகளையும் குவித்திருக்கிறார். இந்திய ஹாக்கி அணியின் முன்னணி நட்சத்திரமாக, சுமார் 16 ஆண்டுகள் கோலோச்சிய தன்ராஜ் பிள்ளை, 339 போட்டிகளில் விளையாடி, சுமார் 170 கோல்களை அடித்திருக்கிறார். “கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, போராடு” என, எப்போதும் தன் சக வீரர்களுக்கும், இளையவர்களுக்கும் சொல்லித்தரும் தன்ராஜ் பிள்ளை, அத்தனை எளிதில் இந்த சாதனைகளை நிகழ்த்திவிட வில்லை.

அடிப்படையில் பூர்வீக தமிழரான தன்ராஜ் பிள்ளையின் குடும்பம், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிமித்தம் காரணமாக மகாராஷ்டிராவுக்கு குடிபெயர்ந்தது.

அங்குதான், 1968 ஜூலை 16ல் நாகலிங்கம் – ஆண்டாளம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் தன்ராஜ் பிள்ளை. அவரது தந்தை ஹாக்கி ஸ்டேடியத்தை பராமரிப்பவராக இருந்ததால், அவரை பார்ப்பதற்காக செல்லும் போது பழக்கமானது தான் ஹாக்கி.. அப்படி பற்றிக்கொண்ட அந்த சிறு தீ தான், பின்னாலில் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் தீச்சுவாலையாக மாறியது.. அந்த பெரு நெருப்பின் பிறந்தநாள் இன்று…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு ; தன்னை தானே சுட்டுக் கொண்ட குற்றவாளி

Web Editor

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்

G SaravanaKumar

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!

Web Editor