ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமை – தி லெஜண்ட் அப்டேட்

தி லெஜண்ட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் பெற்றுள்ளது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28…

தி லெஜண்ட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் பெற்றுள்ளது.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜே டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி, பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார், விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

சில முக்கிய காட்சிகள் உக்ரைனில் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படகுழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். அதே போல இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் தி லெஜண்ட் திரைப்படத்தை எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படத்தை ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

– தினேஷ் உதய் 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.