பெண் உயிரிழந்த விவகாரம் | நடிகர் #AlluArjun-க்கு மீண்டும் சம்மன்!

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ்,…

The issue of the woman's death Summons actor #AlluArjun again!

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. புஷ்பா 2 ரிலீஸுக்கு முன்தினம் இரவு, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அதனை பார்க்க கதாநாயகன் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயரிழந்தார். மேலும், அவருடைய 7 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது எனக்கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.