ஹரியானாவுக்கு எதிரான சீனியர் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 390 ரன்கள் எடுத்து வங்காள மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் சீனியர் மகளிர் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஹரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள மகளிர் அணி ஆடியது.
இதையும் படியுங்கள் : பெண் உயிரிழந்த விவகாரம் | நடிகர் #AlluArjun-க்கு மீண்டும் சம்மன்!
தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய வங்காள அணி ரன்களை குவித்து வந்தது. வங்காள அணியின் வீராங்களைகள் இலக்கை எட்டி வெற்றி பெறுவதற்காக மாறி மாறி ரன்களை குவித்தனர். அதேபோல், வங்காள அணியின் வீராங்கனைகளை வெளியேற்ற முடியாமல் ஹரியானா அணி திணறியது.

இறுதியில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 390 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதுடன் வரலாறும் படைத்துள்ளது. ஒரு நாள் போட்டியில் இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் கேன்டர்பரிக்கு எதிராக விளையாடிய நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 309 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சாதனையை வங்காள அணி முறியடித்துள்ளது.







