ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு இளம்பெண் உயிரிழந்த விவகாரம்; கைதான இளைஞர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்த ரயில்வே போலீசார்…

சென்னை இந்திரா நகரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை இந்திரா நகர் நிலையத்தில் ஓடும் ரயிலில்…

சென்னை இந்திரா நகரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை இந்திரா நகர் நிலையத்தில் ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ப்ரீத்தி என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து நியூஸ் 7 தமிழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே போலீசார். உயிரிழந்த ப்ரீத்தியிடம் செல்போன் பறித்த சம்பவத்தில் கைதான விக்னேஷ், மணிமாறன் என்ற இரு இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்தனர். அந்த செல்போனை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவர்கள் தெரிவித்ததாகவும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.