நடிகர் விஜய் தலைவர்களைப் பற்றி பேசினால் மட்டும் போதாது, அவர்களுடைய கொள்கைகள் படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விழுப்புரம், ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப ஆளுநர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
தந்தை பெரியாரைப் பற்றியோ, அம்பேத்கரை பற்றியோ, காமராஜரை பற்றியோ பேசினால் மட்டும் போதாது, அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப நடிகர் விஜய் நடந்து கொள்ள வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.







