அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாம் நாளான இன்று அமலாக்கத்துறை நடத்திய விசாரணை 6 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்ற நிலையில் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதமசிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.







