செந்தில் பாலாஜி வீட்டில் எதுவும் கிடைக்காததால், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை : உதயநிதி ஸ்டாலின் பேச்சு

செந்தில் பாலாஜி வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் அமைச்சர் எவ வேலு தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்…

செந்தில் பாலாஜி வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அமைச்சர் எவ வேலு தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா
பொதுக்கூட்டம் திருக்கோவிலூர் சாலை கலைஞர் திடலில் நடைபெற்றது. இதில்
சிறப்பு விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து
கொண்டார் . இதில் 10100 பயனாளிகளுக்கு பொற்க்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மகத்தான திட்டங்களை திமுக அரசு வழங்கி வருகிறது. இந்தியாவே எதிர்பார்க்காத வகையில் மகளிருக்கு ஆயிரம்  ரூபாய் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் முத்துவேல் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் அமலாக்கத்துறை (ED) மூலம் பயமுறுத்தி பார்க்கின்றனர் ஆனால் நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், “ஈடி”க்கும் (ED) பயப்பட மாட்டோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.