ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக, ஹராரே நகரில் இன்று பிற்பகல் தொடங்கிய 2வது ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 161 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக சான் வில்லியம்ஸ் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.

ஷிகர் தவன் 33 ரன்களும், சுபமன் கில் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 18ம் தேதி நடந்த 2 ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கடைசி ஒரு நாள் ஆட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) ஹராரேவில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.