வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை!

வருமான வரித்துறை சோதனையால் தான் ராகுல் காந்தி பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், “சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. முதலமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றிகள்,

தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சரின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது. ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்த போது பல்வேறு நெருக்கடிகள் எங்களுக்கு வந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார், ஆனால் செல்லவில்லை. நான் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்த பொழுது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அங்கிருந்த திமுக மாவட்ட செயலாளர்களிடம் பணம் எங்கே என்று பறக்கும் படையினர் அதிகாரமாக கேட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிடம் எந்த பணம் உள்ளது, எங்களுடைய நிர்வாகிகள் 22 லட்சம் வங்கியில் செலுத்தினார்கள். வருமான வரித்துறையினர் எவ்வளவு பணம் பறிமுதல் செய்துள்ளார்கள் என இதுவரைக்கும் ஏன் அறிவிக்கவில்லை.

வருமான வரித்துறையினர் எவ்வளவு பணம் பறிமுதல் செய்தார்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் நேரத்தில் வருமான வரிதுறையினர் எவ்வளவு பணம் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும், சந்திரபாபு நாயுடு தயாராக உள்ளார். நிதீஷ் குமாரும் தயாராக உள்ளனர், நாங்கள் சமாதானமாக சென்றால் ஆட்சி மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.