முக்கியச் செய்திகள் இந்தியா

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு கூடுதலாக மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

அடுத்த மாதம் நடைபெறும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கர் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இல.கணேசன் தமிழகத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை

Web Editor

உணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்

EZHILARASAN D

வரலாற்று நிகழ்வுகளை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது: துரை.வைகோ குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy