தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கண்டன பேரணி!

தென்காசியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், தமிழக அரசு துறைகளில் காலியாக…

தென்காசியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல்,
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக
நிரப்பிட வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசின் தேர்தல் கால
வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி தர கோரி தமிழக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணியானது நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வேளாண் இணை இயக்குனர் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கிய இந்த பேரணியானது தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இந்த பேரணியில் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட
பல்வேறு துறையை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற நிலையில்,
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பேரணியை அரசு ஊழியர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.