எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும் என பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்…

யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும் என பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புயல் எச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களோடு நேரடியாக காணொளி வாயிலாக முதலமைச்சர் கேட்டறிந்தார். மாமல்லபுரத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது. மாமல்லபுரம் பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 121 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மீனவ கிராம மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்று உணவு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சரை உத்தரவிட்டுள்ளார். 1,936 நிவாரணம் மையங்கள் மாநில முழுவதும் தயார் நிலையில் உள்ளது. இரவு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்குவோம். 2,204 பேர் தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் இனி தொடர்ந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை தொடர்ந்து நிவாரண முகங்களில் பொதுமக்களை பத்திரப்படுத்தும் வேலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மிகப்பெரிய பாதிப்பு சென்னைக்கு இருக்காது என எதிர்பார்க்கிறோம். சென்னையை பாதித்தாலும் தயார் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும். அணை திறந்து விடும் நிலையில் தற்போது எங்கும் இல்லை. உரிய முன்னறிவிப்புகள் கொடுத்தே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.