சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். ஜனவரி 27ம் தேதி பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில், ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் அறிமுகமாகி இருக்கிறார்.
பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஐஸ்வர்யா கூறியதாக சொல்லப்படுகிறது. தான் டாக்டருக்கு படித்து வருவதாகவும், படிப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி, தனது தந்தை வங்கி கணக்கின் மூலம் பாரதிராஜாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் ஏமாற்றி பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா.
இதேபோல் மகேந்திரனை என்கிற காவலரையும் ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக பாரதிராஜா,மகேந்திரன் ஆகிய இருவரிடம் பேசுவதை நிறுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிராஜா புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஐஸ்வர்யாவின் செல்போன் எண்ணை ஆராய்ந்து, அவரது இருப்பிடத்தை அறிந்து கைது செய்தனர்.
விசாரணையில், ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் ஜஸ்வர்யா பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. முகநூலில் காவலர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனடிப்படையில் ஜஸ்வர்யாவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.








