பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த
அருணாச்சலத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி கமலஹாசன்
தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை
அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் ஆறுமுகம், அருணாச்சலம், முரளி அப்பாஸ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில்
ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத்
கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் விரைவில்
மேற்கொள்ள இருக்கும் கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறனின்
அடிப்படையில் தான் இருக்கும் என கமல் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடைக்கோடி தமிழர்க்கும் கொண்டு
சேர்க்கும் வகையில் மீடியா மற்றும் ஐடி அணி நான்காக பிரித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் மேற்கொண்ட பரப்பரை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பாற்றிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நற்பணி இயக்க நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சர்வதேச மகளிர் தினத்தை மகளிர் அணி சிறப்பாக கொண்டாட முடிவு
எடுக்கப்பட்டதோடு,கலை, இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுக்க, பொது நல சேவைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையும் படியுங்கள்: மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா திடீர் சந்திப்பு
கட்சியின் சார்பணிகள் துணைத் தலைவர் மௌரியா தலைமையிலும், கட்சி
வளர்ச்சிப் பணிகள் தங்கவேலு தலைமையிலும் செயல்படும் என கமல்ஹாசன்
தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
– யாழன்