ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவை முத்தமிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவை முத்தமிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெலி ஓடியா-காஸ்டெரா பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கழுத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிடுவது போல் புகைப்படம் காட்டுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியான இந்த புகைப்படங்கள் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலர் “இது அநாகரீகமானது” என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த புகைப்படத்திற்கு மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் எவ்வாறு பதிலளிப்பார் என்று கற்பனை செய்து மீம்ஸ்களை உருவாக்கினர்.
🇫🇷📷 EN IMAGES | Emmanuel Macron et Amélie Oudéa-Castéra après la cérémonie d’ouverture des JO de #Paris2024. pic.twitter.com/MyNR6KOJmW
— Cerfia (@CerfiaFR) July 27, 2024







