சிம்பு படத்தின் காட்சிகள் திருப்தி இல்லாததால் மீண்டும் படப்பிடிப்பில் இறங்கிய கவுதம் மேனன்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் திரை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படமாக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியில் கவுதம் மேனனுக்கு திருப்தியை ஏற்படாமல் போனதாகக் கூறப்படுகிறது. எடிட் பணிகள் முடிந்தும் திருப்தி இல்லாமல் இப்போது அந்த சண்டைக் காட்சியை மீண்டும் படமாக்கக் கவுதம் மேனன், சிம்பு என அந்தக்காட்சியில் இடம் பெறும் அனைவரும் லக்னோவில் முகாமிட்டு தீவிரமாகப் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
மேலும் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும் முதல் பாகத்தின் கதை ஒரு சாதாரண மனிதன் கேங்ஸ்டராக மாறுவதைப் பற்றியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சிம்புவின் மற்றொரு படமான ‘பாத்து தல’ படத்தில் வரும் நீளமான தாடி வைத்திருக்கும் தோற்றத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தோற்றத்தில் சிம்பு இருக்கும் புகைப்படங்களைப் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு; சிம்புவோடு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற கவுதம் மேனன்
சிம்பு படத்தின் காட்சிகள் திருப்தி இல்லாததால் மீண்டும் படப்பிடிப்பில் இறங்கிய கவுதம் மேனன்.கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய…






