திருப்பதி மலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை – கூண்டு வைத்து பிடித்த வனத்துறை..!

திருப்பதி மலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  சிறுத்தை ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியதி. …

திருப்பதி மலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  சிறுத்தை ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியதி.  இந்த சம்பவத்தில்  சிறுமி லக்ஷிதா உயிரிழந்தார். சிறுமி லக்‌ஷிதா உயிரிழந்த சம்பவம் திருப்பதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மலை காட்டில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. திருப்பதி திருமலை இடையே உள்ள சாலைகள் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் வழித்தடங்கள் ஆகியவற்றின் அருகே சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமலை வனப்பகுதியில் நடமாடும் விலங்குகளால் பாதையாத்திரை செல்வோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களை சிறுத்தைகள் இழுத்துச் செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

எனவே, பாதுகாப்பு கருதி திருமலை பகுதியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருமலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி மலைக்கு பாதயாத்திரை ஆக நடந்து சென்று கொண்டிருந்த 6 வயது சிறுமியை  சிறுத்தை புலி ஒன்று கடித்து குதறி கொன்ற நிலையில், அதனை பிடிப்பதற்காக மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில்  சிறுத்தை ஒன்று கூண்டு ஒன்றில் புகுந்து சிக்கிக்கொண்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.