இன்று மாலை கூடுகிறது ‘I2U2’ மாநாடு

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான ‘I2U2’ மாநாடு இன்று மாலை கூடுகிறது. மேற்காசியாவுக்கான உலகின் மிக முக்கிய கூட்டமைப்பாக QUAD அமைப்பு உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா,…

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான ‘I2U2’ மாநாடு இன்று மாலை கூடுகிறது.

மேற்காசியாவுக்கான உலகின் மிக முக்கிய கூட்டமைப்பாக QUAD அமைப்பு உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இதேபோல், மத்திய கிழக்கு ஆசியாவுக்கான  உலகின் மிக முக்கிய கூட்டமைப்பாக I2U2 உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

I2U2-ல் ஆங்கில எழுத்தான I இந்தியா மற்றும் இஸ்ரேலையும், U UAE மற்றும் USA-வையும் குறிக்கின்றன.

I2U2- ன் முதல் மாநாடு காணொளி காட்சி வாயிலாக இன்று மாலை சுமார் 4 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் யேர் லேபிட், UAE அதிபர் முகம்மது பின் ஜயெத் அல் நயான், USA அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

உலகில் தற்போது அதிகரித்திருக்கும் உணவு பற்றாக்குறை, தூய எரிசக்திக்கான பற்றாக்குறை ஆகியவற்றை போக்குவது குறித்து இதில் விவாதிக்கவும், இதற்கான முதலீடுகளை செய்வது குறித்து முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ. 16,000 கோடி முதலீட்டில் வேளாண் பூங்கா அமைப்பது குறித்த அறிவிப்பு இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பூங்காவிற்கான நிதி உதவியை செய்ய ஐக்கிய அரபு எமிரேட்சும், தொழில்நுட்ப உவியை செய்ய இஸ்ரேலும், பிற உதவிகளை அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்றும் வழங்க முன்வந்துள்ளன.

உலகில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தடுக்கும் நோக்கிலான மிக முக்கிய முயற்சியாக இந்த உணவுப் பூங்கா திட்டம் பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் போது, 4 நாடுகளும் இணைந்து முதலீடுகளை செய்வதற்கான துறைகள் குறித்தும் ஆலோசிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.