இளையராஜா குரலில் ‘விடுதலை 2’ முதல் பாடல் நாளை வெளியீடு!

விடுதலை – 2 படத்தின் முதல் பாடலை குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை – 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல்…

The first song of ‘Viduthulai 2’ in the voice of Ilayaraja is released - The film crew has given an update!

விடுதலை – 2 படத்தின் முதல் பாடலை குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை – 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் காட்சிகள் இருக்கின்றன. மேலும், திட்டமிட்ட கதையை மாற்றி நீண்ட நாள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தினம் தினமும் பாடல் நாளை (நவ.17) வெளியாகிறது. தற்போது, புரமோவை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை, இளையராஜா எழுதி, பாடியுள்ளார். இளையராஜா இசையமைப்பில் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிதாகக் கவனம் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் மீதும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.