அனிருத் – சாய் அபயங்கர் கூட்டணி – ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘சலம்பல’ நாளை வெளியாகிறது!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அவரது 23வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘சலம்பல’ நாளை வெளியாகிறது! இந்தப் பாடல் வெளியீட்டு அறிவிப்புடன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பாடகர் சாய் அபயங்கர் இணைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத்தின் துள்ளலான இசையில், சாய் அபயங்கரின் வசீகரமான குரலில் உருவாகியுள்ள இந்த ‘சலம்பல’ பாடல், ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ, இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், முழுப் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

‘மதராஸி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிருத் மற்றும் சாய் அபயங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சலம்பல’ பாடல் ‘மதராஸி’ படத்திற்கு ஒரு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.